தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் வாக்கு எண்ணிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது குறித்து பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் வெளியாகும் கணிப்புகளால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாவற்றையும் பணமாக்கத் துடிக்கும் இதுபோன்ற கூட்டத்திடமிருந்து மக்கள் தப்பவே முடியாதா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஒழித்துக் கட்ட சட்டத்தில் இடமில்லையா என்றும், இதனால் குழப்பங்கள் மட்டுமே மிஞ்சும் என்றும் அவர் மிக ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்
