அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடும் வரை அந்நாட்டுத் துறைமுகங்களை முற்றுகையிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஹார்மோஸ் நீர்ச்சந்தி பகுதியில் முற்றுகையைத் தீவிரப்படுத்தி, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் அந்த நாட்டிற்குப் பெரும் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்று ஈரான் உறுதி அளிக்கும் வரை இந்த முற்றுகை நீடிக்கும் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா சட்டவிரோத முற்றுகையைத் தொடர்ந்தால் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய பதிலடியை ஈரான் கொடுக்கும் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ரஷ்ய அதிபர் புதின், ட்ரம்ப் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, இந்த மோதலைத் தீர்ப்பதற்கான சில யோசனைகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
