விலங்குகளிடம் இருக்கும் அந்த ஒரு துளி கருணை மட்டும் மனிதனிடம் இருந்திருந்தால், இந்த பூமி என்றோ சொர்க்கமாக மாறியிருக்கும்” – சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் உருக்கமான வரிகள் இவை.

வாயில்லா ஜீவன்கள் காட்டும் எதிர்பார்ப்பற்ற அன்பு, மனிதநேயம் மங்கி வரும் இன்றைய காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு தெருநாய் ஒன்று தன் இனத்தைச் சேராத 2 பூனை  குட்டிகளைக் காப்பாற்ற ஒரு தாய் விலங்கு காட்டும் அக்கறையும், ஆபத்தான சூழலிலும் விலகாமல் நிற்கும் அதன் அர்ப்பணிப்பும் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.

 

அதாவது அந்த வீடியோவில் தெரு நாய் ஒன்று கடையின் வெளியே வைக்கப்பட்டு இருந்த உணவு ஒன்றை கவிக்கொண்டு ஓடியது. இதனை பார்த்த நபர் நாயை பின்தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த நாய் அந்த உணவைக் கொண்டு சென்று 2 பூனை குட்டிகளுக்கு உணவளித்தது. இதை பார்த்ததும் அந்த நபர் வாயடைத்து நின்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.