ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானியை முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் செம காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் குறித்து ஹேமங் பதானி முன்பு பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள்தான்.
“பிளமிங் ஒரு சிறந்த பயிற்சியாளர் என்றால் ஏன் ஐபிஎல் தவிர மற்ற தொடர்களில் ஜெயிக்கவில்லை? சிஎஸ்கே ஜெயிப்பதற்கு தோனிதான் காரணம்” என்று பதானி முன்பு கிண்டலாகப் பேசியிருந்தார்.
இதனை தற்போது கையில் எடுத்துள்ள ஸ்ரீகாந்த், தனது யூடியூப் சேனலில் ஹேமங் பதானியை வறுத்து எடுத்துள்ளார். “ஹேய் ஹேமங்.. மத்தவங்கள பத்தி பேசுறதுக்கு முன்னாடி உன்னோட வேலையை ஒழுங்கா கவனி.
வாழ்க்கையில எப்பவுமே அதிகமா பேசக்கூடாதுன்னு நான் சொல்லுவேன். பிளமிங் மற்றும் தோனி பற்றி பேச நீ யாரு? இப்போ பாரு, உன் அணி 75 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி கேவலமா தோத்துருக்கு.
இப்போதாவது வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்” என்று பொங்கித் தீர்த்துள்ளார். டெல்லி அணி தொடர்ந்து மூன்று தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீகாந்தின் இந்த “ரோஸ்ட்” வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
