கடந்த 2008-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய இளையோர் அணி (U-19) உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெறும் 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ‘ஆட்டநாயகன்’ விருது வென்றவர் அஜிதேஷ் அர்கல்.
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், விராட் கோலியும் அஜிதேஷும் மீண்டும் ஒரே களத்தில் சந்தித்தனர். ஆனால் இம்முறை அஜிதேஷ் வீரராக அல்ல, பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ நடுவராக (Umpire) களமிறங்கினார்.
வருமான வரித்துறையில் பணியாற்றி வந்த அஜிதேஷ், பிசிசிஐ-யின் நடுவர் தேர்வில் தேர்ச்சியடைந்து இந்த 2026 ஐபிஎல் தொடரில் நடுவராகப் பணியாற்றி வருகிறார். போட்டியின் முடிவில், விராட் கோலி நடுவர் அஜிதேஷிடம் சென்று நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்த வீடியோ, 2008-ஆம் ஆண்டு நினைவுகளைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
क्या आप जानते हैं कि Virat Kohli इस अंपायर को देखकर मुस्कुरा क्यों रहे हैं? 🤔
✍️ नाचीज़ की क़लम से
क्योंकि ये कोई आम अंपायर नहीं हैं।
दिल्ली कैपिटल्स के खिलाड़ी के पास काली जर्सी में खड़े ये शख्स हैं Ajitesh Argal और कहानी सिर्फ इतनी नहीं कि इन्होंने विराट के साथ ड्रेसिंग रूम… pic.twitter.com/8Tyi6wEP8I— Sanjay Kishore (@saintkishore) April 28, 2026
இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சால் டெல்லி அணி வெறும் 75 ரன்களுக்கு சுருண்டது. இது இந்தத் தொடரின் மிகக்குறைந்த ஸ்கோராகும். பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து முன்னாள் வீரர் மிட்செல் மெக்லெனகன் கோலியின் ஆட்டத்தைப் பாராட்டிப் பேசுகையில், “ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடப்பது எளிதல்ல. ஆரம்பத்தில் நடுத்தர வரிசையில் விளையாடி, பின்னர் தொடக்க வீரராக மாறி இன்று 10,000 ரன்களை நோக்கிப் பயணிக்கும் கோலி, ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
