தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னையில் தனது கட்சியின் வேட்பாளர்களை நேரில் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார். தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த கள நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

​தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்களை அழைத்து விஜய் பேசுவது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது. முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்துள்ள தவெக, எத்தனை இடங்களில் வலுவாக இருக்கிறது என்பது குறித்து வேட்பாளர்களிடம் விஜய் கேட்டறிய உள்ளார். இந்தச் சந்திப்புக்கு பிறகு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.