ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, டெல்லி ரசிகர்கள் ஆர்சிபி அணியினரை கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதலில், டெல்லி அணி ஆர்சிபிக்கு எதிரான ரன் வித்தியாசத்தில் 49 ரன்களைக் கடந்தபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “49, 49!” என ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி அணி எடுத்த மிகக்குறைந்த ஸ்கோரான 49 ரன்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது, இதனால் மைதானமே உற்சாகத்தில் அதிர்ந்தது.

“>

இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 49 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான சாதனையைப் படைத்தது. அந்த கசப்பான வரலாற்றுச் சம்பவத்தை தற்போது டெல்லி ரசிகர்கள் கையில் எடுத்து, ஆர்சிபி ரசிகர்களைச் சீண்டினர்.

இந்நிலையில் களத்தில் வீரர்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கையில், கேலரியில் இருந்த ரசிகர்கள் பழைய புள்ளிவிவரங்களை வைத்து இதுபோன்று வேடிக்கையாகக் கிண்டல் செய்தது போட்டியின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்தது. இந்த சுவாரஸ்யமான தருணம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.