இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், தற்போது அவரே சமூக வலைத்தளம் வாயிலாக முழு விளக்கத்தையும் அளித்துள்ளார்.
கார் கண்ணாடி உடைக்கப்பட்டதற்குப் பின்னால் அரசியல் சதி இருக்குமோ என்று பலரும் சந்தேகித்த நிலையில், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காவல்துறை விசாரணையில் இதில் எந்தவிதமான அரசியல் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இது தனிப்பட்ட ஒரு தறுதலையின் செயல் என்பது தெரியவந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்லெறிந்த அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஜேம்ஸ் வசந்தன், உண்மையைச் சொல்ல வேண்டியது தனது கடமை என்பதால் இதைப் பகிர்வதாக உருக்கமாகக் கூறியுள்ளார்.
