பாலிவுட் நட்சத்திர நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஏக் தின்’ (Ek Din) திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனது மகனின் நடிப்பைப் பார்த்து நடிகர் அமீர் கான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், ஜுனைத் கானுக்கு ஜோடியாக தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் சாய் பல்லவி மற்றும் ஜுனைத் கான் முதல்முறையாக இணைந்துள்ளனர். இப்படம் ஒரு அழகான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அமீர் கான் மற்றும் அவரது தோழி கௌரி ஸ்ப்ராட் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திரையில் தனது மகனின் நடிப்பைப் பார்த்த அமீர் கான், மகிழ்ச்சியிலும் பெருமையிலும் கண்கலங்கினார். அவர் தனது கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கண்ட அருகில் இருந்த நடிகை சாய் பல்லவி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமீர் கான் கூறியதாவது, சாய் பல்லவி இந்தியாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். அவருடன் இணைந்து ஜுனைத் கானும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். ஜுனைத்தின் வளர்ச்சியைப் பார்க்கும்போது ஒரு தந்தையாக எனக்குப் பெருமையாக இருக்கிறது என்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அமீர் கானின் தந்தை பாசத்தைப் பாராட்டி வருகின்றனர். ‘ஏக் தின்’ திரைப்படம் வரும் மே 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி இடையிலான Chemistry திரையில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
