ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பனார் பகுதியில், ஆசிரியர் ஒருவரை மாணவர் ஒருவர் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஒரு ஆசிரியர் பள்ளியில் வைத்து ஒரு மாணவி முன் அந்த மாணவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி நேரம் முடிந்த பிறகு சரண் நகர் பகுதியில் ஆசிரியரை வழிமறித்துள்ளார். இருவருக்கும் இடையே முதலில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
स्कूल में अध्यापक ने लड़की के सामने छात्र को पीटा,, फिर गुस्साएं छात्र ने छुट्टी के बाद टीचर को भी बीच सड़क पर बिछा -बिछाकर पीटा,, वीडियो हुआ वायरल
📍 सारण नगर, जोधपुर pic.twitter.com/5bkIC6gBuJ
— ocean jain (@ocjain4) April 26, 2026
வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவர் ஆசிரியரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். சாலையில் சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இருவரையும் பிரிக்க முயன்றனர். ஒரு பெண், “நிறுத்துங்கள்! யாராவது போலீசாருக்கு போன் செய்யுங்கள்!” என்று கூச்சலிடுவது வீடியோவில் கேட்கிறது. பொதுமக்கள் எவ்வளவோ தடுத்தும், ஆத்திரம் குறையாத அந்த மாணவர் ஆசிரியரைத் தொடர்ந்து தாக்கி வந்துள்ளார்.
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “சம்பந்தப்பட்ட மாணவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
பிள்ளைகளின் வளர்ப்பில் குறைபாடு உள்ளது. பெற்றோர்கள் சரி செய்ய வேண்டிய நேரம் இது” என மற்றொருவர் விமர்சித்துள்ளார். பெற்றோர்கள் வீட்டில் எதைச் செய்கிறார்களோ, அதையே பிள்ளைகள் வெளியே பிரதிபலிக்கிறார்கள் என்று சிலர் குடும்ப வளர்ப்பைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் ஆசிரியருக்கே பாதுகாப்பு இல்லாத இந்தச் சூழல் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
