திருவிழாக்களில் விளையாடப்படும் பலூன் உடைக்கும் விளையாட்டில், இளைஞர் ஒருவர் தனது அபாரமான திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக பொழுதுபோக்கிற்காக விளையாடப்படும் இந்த விளையாட்டில், அந்த இளைஞன் ஒரு நொடிகூடத் தவறாமல், மின்னல் வேகத்தில் ஒவ்வொரு பலூனையும் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கினார்.
எங்கே குறிவைக்க வேண்டும் என்பது அவருக்கு முன்பே தெரிந்தது போல,எவ்விதத் தயக்கமும் இன்றி அவர் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களைத் திகைக்க வைத்தது. @Muskan_nnn என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஏற்கனவே மில்லியன் கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
<a href="http://
When hacker meets developer 🌚 pic.twitter.com/DPPAIWWcoh
— Muskan (@Muskan_nnn) April 24, 2026
“>
அந்த இளைஞனின் தன்னம்பிக்கையையும் வேகத்தையும் பார்த்த இணையவாசிகள், “இவரை நேரடியாக ஒலிம்பிக்கிற்கே அனுப்பலாம்” என்றும், “இவர் ஒரு தொழில்முறை துப்பாக்கிச் சுடும் வீரராக இருப்பாரோ” என்றும் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு சாதாரண திருவிழாவில் தன்னோட அபாரமான திறமையால் அனைவரின் கவனத்தையும் அந்த இளைஞர் ஈர்த்துள்ளார்.
