பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, 2026-ம் ஆண்டுக்கான பிஎஸ்எல் (PSL) டி20 தொடர் இதுவரை ரசிகர்கள் இன்றி மூடிய மைதானங்களுக்குள்ளேயே நடத்தப்பட்டு வந்தது. எரிபொருளைச் சேமிப்பதற்காக மக்கள் பயணங்களைக் குறைக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டதால், பிசிபி (PCB) இந்தத் தேர்தலை எடுத்திருந்தது.
இந்நிலையில், வரும் மே 3-ம் தேதி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் (Gaddafi Stadium) நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு மட்டும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளதாகப் பிசிபி தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். தொடர் முழுவதும் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், இறுதிப்போட்டிக்கு மட்டும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது கிரிக்கெட் பிரியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
