ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சூர்யவன்ஷி தனது இரண்டாவது சதத்தை விளாசி அசத்தினார்.
இது குறித்துப் பேசிய கம்மின்ஸ், “தற்போது எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிதான். அவருடைய பேட்டிங்கை பார்ப்பதே ஒரு தனி மகிழ்ச்சி. ஒரு பந்துவீச்சாளராக அவருக்கு எதிராகச் சிறு தவறு செய்தால் கூட, அதை அவர் பவுண்டரிக்கு விரட்டி விடுகிறார்,” என்று வியப்புடன் தெரிவித்துள்ளார். சூர்யவன்ஷியின் அபாரமான திறமை மற்றும் ஆட்டத்திறன் குறித்துப் பேசிய கம்மின்ஸ், அவருக்கு எதிராகப் பந்துவீசுவது சவாலானது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இதனால் இளம் வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூர்யவன்ஷி, கிரிக்கெட் பயணத்தில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும், எதிர்காலத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக உருவெடுப்பார் என்றும் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் அரங்கில் இந்த இளம் வீரரின் அதிரடி தொடர்வது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
