பாகிஸ்தானில் உள்ள ஒரு வகுப்பறையில், மாணவர் ஒருவர் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை ஒரு சிறிய மாடல் மூலம் விளக்கினார். பூமி எப்படிச் சுழல்கிறது, நிழல் எப்படி விழுகிறது என்பதை அவர் விளக்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த  இஸ்லாமிய தலைவர் ஒருவர் குறுக்கிட்டு அதிர்ச்சியான கேள்வியை எழுப்பினார்.

 

“பூமி இப்படிச் சுழல்கிறதா? ஆனால் புனித நூலில் பூமி நிலையானது என்று கூறப்பட்டுள்ளதே.. இப்போது நீ எதைச் சரி என்பாய்?” என்று அந்த மாணவனை நோக்கிக் கேட்டார்.  இஸ்லாமிய தலைவரின் கேள்வியால் நிலைகுலைந்த அந்த மாணவன், “புனித நூலில் இருப்பதுதான் சரி” என்று கூறித் தனது அறிவியல் விளக்கத்தைக் கைவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும், “அந்த மாணவன் பயத்தில்தான் அப்படிச் சொல்லியிருப்பார், இல்லையென்றால் மத நிந்தனை எனக் கூறி அவரைத் தாக்கியிருப்பார்கள்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அறிவியலும் மதமும் மோதிக்கொண்ட இந்தச் சம்பவம், பாகிஸ்தானின் கல்வித் தரம் குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.