தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பாக, மாநிலத்தில் உள்ள எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேவையில்லை என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான புகார்கள் எழுந்த போதிலும், ஒட்டுமொத்தமாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இது குறித்து ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு (Repoll) நடத்துவதற்கான பரிந்துரைகள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிலும் மறுவாக்குப்பதிவு அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற 44,376 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நியாயமான முறையில் நடந்துள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் விதிகளின்படி நேர்மையாக நடந்துள்ளதை இந்த அறிவிப்பு உறுதி செய்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.