மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று 152 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிர்ச்சியூட்டும் வன்முறைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தெற்கு மிதனாப்பூரின் குமார்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்கார் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.
பாதுகாப்பிற்குப் போலீஸார் இருந்தும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேபோல், ஆசன்சோல் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பாலின் கார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், காரின் கண்ணாடி உடைந்து அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
In South Dinajpur, Bengal
Locals attacked BJP candidate Subhendu Sarkar. He can be seen running away from the locals.😂😂
This is the level of anger in people against the BJP due to SIR.
Seems like the Exit polls are already in pic.twitter.com/Ot1pabkECf
— Nehr_who? (@Nher_who) April 23, 2026
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நௌடா பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். வாக்குச்சாவடிக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்ததால் வாக்காளர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது. ‘ஆகிஜேபி’ கட்சித் தலைவர் ஹுமாயூன் கபீர், போலீஸார் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குவாதம் வெடித்தது. வன்முறை ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலின் அடுத்தகட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதியும், முடிவுகள் மே 4-ஆம் தேதியும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
