பீகார் மாநிலம் பகஹா பகுதியில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குச் சிறந்த கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த மாவட்டத்தின் பொறுப்பு எஸ்பி (SP) நிர்மலா குமாரி, ஒரு பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.
அந்தப் பள்ளிக்குத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், சமீபத்தில் சென்றபோது ஒரு அதிர்ச்சியான தகவலை அறிந்தார்.
ये वीडियो बिहार के बगहा से सामने आया है, जहां की प्रभारी एसपी निर्मला कुमारी ने एक विद्यालय को गोद लिया, ताकि छात्राओं को बेहतर शैक्षणिक माहौल मिल सके. निर्मला कुमारी नियमित रूप से स्कूल का निरीक्षण करती रहती हैं. निरीक्षण के दौरान जब उन्हें जानकारी मिली कि विद्यालय में अंग्रेजी… pic.twitter.com/ucGJk21GWq
— ABP News (@ABPNews) April 23, 2026
அந்தப் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்களே இல்லை என்பதுதான் அது. இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை விரும்பாத எஸ்பி நிர்மலா குமாரி, அடுத்த நொடியே கையில் சாக் பீஸ் எடுத்து மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கினார்.
சீருடையில் இருந்த ஒரு உயரதிகாரி, வகுப்பறையில் அமர்ந்து மாணவிகளுக்குப் பாடம் எடுக்கும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரின் இதயங்களை வென்றுள்ளது. கடமையைத் தாண்டி, சமூக மாற்றத்திற்காக அவர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நாடெங்கிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
