தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னனி நடிகர்கள் அனைவரும் வரிசையாக வந்து வாக்களித்து வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் தேர்தலின் தனித்துவமான அம்சம் குறித்துத் தனது பார்வையினைப் பகிர்ந்து கொண்டார்.

​”இந்தத் தேர்தலில்தான் முதல்முறையாக சமூக வலைதளங்களின் (Social Media) ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பதை நான் பார்க்கிறேன். மக்களின் கருத்துக்களும், அரசியல் களத்தின் போக்குகளும் டிஜிட்டல் தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என அவர் தெரிவித்தார். மேலும், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன், “தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களைப் போலவே நானும் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்” எனச் சிரித்தபடியே கூறி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். எஸ்கே-வின் இந்தப் பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.