ஐஐடி காரக்பூர் பேராசிரியர் அரோபிந்தா ரௌத்ரே தனது பிறந்தநாளை மாணவர்களுடன் கொண்டாடிய வீடியோ, இணையத்தில் பெரும் வைரலாகி பலரது பொறாமையையும் பாராட்டையும் ஒருசேரப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவில், பேராசிரியர் சாக்லேட் கேக் வெட்டியதுடன், தனது சொந்தச் செலவிலேயே மாணவர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து அளித்து அசத்தியுள்ளார்.
பாஸ்தா, ஐஸ்கிரீம், பூரி மற்றும் விதவிதமான கறிகள் என மாணவர்களுக்குத் தடபுடலான மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், ஒரு பெரிய தோட்டத்தில் நடந்த இந்த விருந்தில் பேராசிரியர் ரௌத்ரே அவர்களே நேரில் நின்று மாணவர்களுக்குப் பரிமாறியதுதான். இந்த வீடியோவைப் பார்த்த பிற கல்லூரி மாணவர்கள், “நான் தப்பான டிபார்ட்மென்ட்டில் சேர்ந்துட்டேன் போல” என்றும், “எங்க ஊர்ல டீச்சர்ஸ் டே-க்கு கூட ஒன்னும் தரமாட்டாங்க” என்றும் ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
