ஐபிஎல் 2026 தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான “எல் கிளாசிகோ” மோதல் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த அனல் பறக்கும் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் சிஎஸ்கே வீரரும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் வீரருமான தீபக் சாஹர் மற்றும் எம்.எஸ்.தோனி இடையேயான அழகான நட்பு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

வலைப்பயிற்சியின் போது தோனியைச் சந்திக்கச் சென்ற தீபக் சாஹரை கண்டதும், தோனி தனது பாணியில் ஜாலியாகக் கிண்டல் செய்துள்ளார். அப்போது சாஹருடன் வந்த கேமராமேனைப் பார்த்த தோனி, “நீ வரும்போது கூடவே கேமராவையும் கூட்டிட்டு வர்ற.. முதல்ல அவரை இங்கிருந்து கிளப்பச் சொல்லு” என இந்தியில் கிண்டலாகக் கூறியுள்ளார்.

அதற்குச் சிரித்துக்கொண்டே சாஹர், “அண்ணே.. நீங்க கொஞ்சம் கிளம்புங்க” என கேமராமேனை அங்கிருந்து அனுப்பி வைத்தார். உடனே தோனி புன்னகையுடன், “ஆமா.. இல்லன்னா நம்மளால நிம்மதியா பேச முடியாது” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

மைதானத்தில் எதிரெதிர் அணியாக இருந்தாலும், தோனி மற்றும் சாஹர் இடையிலான அந்த “அண்ணன் – தம்பி” பாசம் இப்போதும் மாறாமல் இருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.