ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்துப் பேசியுள்ள கருத்துகள் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான எனது பயணம் மிகவும் கசப்பான முறையில் முடிந்தது.

அவர்கள் என்னை ஒரு மூத்த வீரராக மதிக்காமல், ஒரு சிறு பிள்ளையைப் போல நடத்தினார்கள்” என கெய்ல் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், டிரெஸ்ஸிங் ரூமிலேயே பலமுறை அழுதுள்ளதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

தன்னை ஒரு கால்நடையைப் போல அந்த அணி நிர்வாகம் நடத்தியதாகக் கூறியுள்ள கெய்ல், அங்கு வீரர்களுக்கு எவ்வித மரியாதையும் அளிக்கப்படுவதில்லை எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். 2018 முதல் 2021 வரை பஞ்சாப் அணிக்காக விளையாடிய கெய்ல், அந்த அணியின் உரிமையாளர்கள் குறித்துப் பேசியிருப்பது மறைமுகமாகப் ப்ரீத்தி ஜிந்தாவைக் குறிப்பதாகச் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் 175 ரன்கள் எடுத்து அசைக்க முடியாத சாதனை படைத்த ஒரு ஜாம்பவானை, பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் இப்படி நடத்தியது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.