தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி எளிதாக வாக்குச் சாவடி விவரங்களைக் கண்டறிய முடியும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான அல்லது அலைபேசி செயலி வாயிலாக உங்கள் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் என்ற பகுதியைத் தேர்வு செய்து, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம், நீங்கள் வாக்களிக்க வேண்டிய பள்ளியின் பெயர், அறை எண் மற்றும் வாக்குச் சாவடி முகவரி ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், 1950 என்ற இலவச உதவி எண்ணிற்கு அழைத்தோ அல்லது என டைப் செய்து 1950-க்கு குறுஞ்செய்தி அனுப்பியோ உங்கள் வாக்குச் சாவடி விவரங்களை உடனடியாகப் பெறலாம்.

மேலும் வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சாவடியைத் தேடும் சிரமத்தைக் குறைக்க, தேர்தல் ஆணையம் வீடுகளுக்கே சென்று ‘வாக்காளர் தகவல் சீட்டு’ வழங்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்க முடியும்.

இந்நிலையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக வாக்குச் சாவடிகளில் சாய்வுதளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, உங்கள் வாக்குச் சாவடியை முன்னரே உறுதி செய்து கொண்டு, ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்றுங்கள்.