தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வ இணையதளமான அல்லது செயலி வாயிலாக உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் ஸ்லிப் என்பது உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டறிய மட்டுமே உதவும்; அது ஒரு அடையாள ஆவணமாகக் கருதப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
இதனால் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு (Passport), புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் அசல் கடவுச்சீட்டை மட்டுமே அடையாள ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
