எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர்களின் நெஞ்சை உறையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் இரண்டு சிறு குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் குழந்தைகள் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். நீண்ட நேரம் தண்ணீரில் தத்தளித்த அந்த இரண்டு குழந்தைகளும், உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஒட்டுமொத்தத் துயரச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Not for sensitive viewers ⚠️
She’ll never forgive herself after both children drowned.
Be careful around swimming pools, especially with kids.https://t.co/AW7bBc8Ioh
— Deadly Kalesh (@Deadlykalesh) April 21, 2026
குழந்தைகளைப் பெற்றோர் நீச்சல் குளத்தில் விளையாட அனுமதிக்கும்போது, அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்திருக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது. இத்தகைய ஆபத்தான இடங்களில் குழந்தைகளைத் தனியாக விடுவது முறையல்ல என்றும், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம் என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
