தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தீவிர அரசியலில் கால்பதித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், “விசில் சின்னத்திலே நீங்கள் தட்டுகின்ற ஒரு வாக்கு, மே மாதம் 4-ஆம் தேதி தமிழ்நாட்டிலே விசில் சத்தமாக ஒலிக்க வேண்டும்” என உணர்ச்சிபொங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசில் சின்னத்திலே நீங்கள் தட்டுகின்ற ஒரு வாக்கு மே மாதம் 4 ஆம் தேதி தமிழ்நாட்டிலே விசில் சத்தம் கேட்க வேண்டும் – தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோ வெளியீடு #Vijay #SAChandrasekhar #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/qJuIyXXDQw
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 21, 2026
தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது மகனின் அரசியல் வெற்றிக்காக எஸ்.ஏ.சி நேரடியாக வாக்கு சேகரிப்பில் இறங்கியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகளில் விஜய்யின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தந்தையின் இந்த ஆதரவு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
