தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள நேரடிச் சவால் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
“ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என 10 முறை தேர்தலில் தோற்ற சேலத்துக்காரர் (ஈபிஎஸ்) சொல்கிறார்; உங்களால் சேலத்தைத் தாண்டி வேறு தொகுதியில் போட்டியிட முடியுமா?” என விஜய் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி விஜய்யின் அரசியல் அனுபவத்தைக் கிண்டல் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக “10 முறை தோல்வி”யைச் சுட்டிக்காட்டி விஜய் பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் களம் காண்பதை முன்வைத்து, ஈபிஎஸ்-ஸின் அரசியல் பலத்தை விஜய் பகிரங்கமாகச் சீண்டியிருப்பது 2026 தேர்தல் களத்தை தவெக Vs அதிமுக என்ற போர்க்களமாக மாற்றியுள்ளது.
சென்னை நந்தனம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் விஜய் விமர்சனம் #Vijay #EdappadPalanisamy #Chennai #News18Taminadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/msaq2o6bxf
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 21, 2026
“>
