அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தையும், தனது கட்சியையும் டெல்லியில் அடகு வைத்துவிட்டதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரனை ஆதரித்து, திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி தன்னை டெல்லியில் அடகு வைத்துள்ளார். அமித்ஷா மனது வைத்தால், தேர்தலுக்குப் பிறகு அவர் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராகச் செல்லக்கூடும். தமிழகத்தையும், தமிழ் மொழியையும் வஞ்சிக்கும் பாஜகவினருக்கு இந்தத் தேர்தலில் தமிழினத் துரோகிகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும் என்று கூறினார்.
இதேபோன்று திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எம்பி கனிமொழி எடப்பாடி பழனிச்சாமி அடுத்த ஜென்மத்தில் அவருக்கு பிடித்த குஜராத்தில் புரிந்து கொள்ளட்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் தன்னையும் அதிமுக கட்சியையும் டெல்லியிடம் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்து விட்டதாகவும் அவருக்கு தகுந்த பாடத்தை தேர்தல் மூலம் புகட்ட வேண்டும் எனவும் கனிமொழி கேட்டுக் கொண்டார்.
