மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக (AIPTMK) வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டார்.

தனது வழக்கமான துள்ளலான ஸ்டைலில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்த அவர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க “வெத்தல போட்ட சோக்குல..” உள்ளிட்ட தனது புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களைப் பாடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். “அஇபுதமமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், திருமங்கலம் தொகுதிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்” என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

“>

 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்த்திக்கின் இந்த ‘மியூசிகல்’ பரப்புரையால் திருமங்கலம் தொகுதி மக்கள் கட்சித் தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.