தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர்  தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை செய்த கமல்ஹாசன், “அரசியலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்பதே ஒருவிதமான பயத்தின் வெளிப்பாடு; அதுதான் தோல்வியின் ஆரம்பம். எனக்கு அந்த அளவுக்குப் பேராசை இல்லை, ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடும் அறிவு எனக்கு இருந்தது” என்று விஜய்யின் பெயரைத் தொடாமல் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

“>

 

ஏற்கனவே, 2021 தேர்தலில் தான் கோவை தெற்கில் மட்டும் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டிய கமல், விஜய் தற்போது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் களம் காண்பதை முன்வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை திராவிடக் கட்சிகளுக்குச் சவாலாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமலின் இந்த ‘நேரடி அட்டாக்’ தவெக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.