இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பொருட்களை மறப்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இதற்கு முன்பே அவர் தனது பாஸ்போர்ட், டேப்லெட் மற்றும் இயர்போன்களை மறந்த பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பேருந்தில் கிளம்பத் தயாரானபோது, ரோஹித் சர்மா திடீரென ஏதோ ஒன்றை ஹோட்டல் அறையிலேயே மறந்துவிட்டதை உணர்ந்து அவசரமாகப் பேருந்தில் இருந்து கீழே இறங்கினார்.

அவர் திரும்பி வரும் வரை மற்ற வீரர்கள் பேருந்திலேயே காத்திருக்க வேண்டியிருந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஒருமுறை விராட் கோலியுடன் விமான நிலையத்தில் பயணம் செய்தபோது அனுஷ்கா சர்மா தனது செல்போனை மறந்த சம்பவத்தை ரசிகர்கள் ரோஹித் சர்மாவுடன் ஒப்பிட்டுப் பேசி வந்தனர்.

இப்போது ரோஹித் மீண்டும் தனது மறதிப் பழக்கத்தைக் காட்டியுள்ளதால், “ரோஹித் எப்போதுமே ரோஹித் தான்” என ரசிகர்கள் கிண்டலாகவும் ஜாலியாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“>

 

ஹோட்டல் அறைக்குச் சென்று தான் மறந்த பொருளை எடுத்துக்கொண்டு ரோஹித் திரும்பிய பிறகு, ஒருவழியாகத் அணி பேருந்து மைதானத்தை நோக்கிப் புறப்பட்டது.