ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இலங்கை ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகாவுக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) செம அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் விளையாட லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்த ஷனகா, இடையில் ஐபிஎல் வாய்ப்பு வந்தவுடன் பிஎஸ்எல் தொடரை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியாவுக்குப் பறந்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த பாகிஸ்தான் வாரியம், ஒப்பந்தத்தை மீறியதற்காக தசுன் ஷனகாவுக்குப் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் காயமடைந்ததால் அவருக்கு மாற்றாக 2 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷனகா இணைந்தார். ஆனால், பாகிஸ்தான் லீக்கில் அவர் வெறும் 75 லட்சத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

பணத்திற்காகப் பாகிஸ்தான் லீக்கை மதிக்காமல் ஐபிஎல் பக்கம் சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே சிம்பாப்வே வீரர் பிளெசிங் முசரபானி இதேபோல் ஐபிஎல்-லுக்காக பிஎஸ்எல்-லை புறக்கணித்துத் தடை வாங்கிய நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஷனகாவும் இணைந்துள்ளார்.

ஐபிஎல் மோகத்தால் பாகிஸ்தான் வாரியத்தின் கோபத்திற்கு ஆளாகியுள்ள இலங்கை வீரரின் இந்தச் செயல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.