பக்தியைக்கூட திருடுவதற்கு ஒரு ஆயுதமாக மாற்றும் கல்நெஞ்சக்காரர்கள் பெருகிவிட்டனர் என்பதற்கு சாட்சியாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் அங்குள்ள ஒரு மூதாட்டியின் காலில் விழுந்து மிகவும் மரியாதையாக ஆசிர்வாதம் வாங்குகிறார்.

அந்த மூதாட்டியும் எவ்வித சந்தேகமுமின்றி அவருக்கு ஆசி வழங்குகிறார். ஆனால், அடுத்த சில வினாடிகளில் அந்த நபர் தான் வந்த காரியத்தைக் காட்டுகிறார்.

ஆசிர்வாதம் வாங்கிவிட்டு எழுந்த வேகத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பலமாகப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடுகிறார்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அந்த மூதாட்டி நிலைகுலைந்து போகிறார். பக்தி வேடத்தில் வந்து அரங்கேறிய இந்த நூதனத் திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.