தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பாஜக முன்னாள்தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் செல்வப்பெருந்தகைக்கு அழைப்பு விடுக்கப்படாததால், அந்த அவமானத்தைத் தவிர்க்கவே அவர் ஐடி ரெய்டு நடப்பதாகப் பொய் கூறி வீட்டிற்குள் பதுங்கிக்கொண்டதாக அண்ணாமலை சாடியுள்ளார்.
சோதனை நடப்பதாகச் சொல்லப்படும் நேரத்தில் அவர் வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்ததே, இது ஒரு போலியான நாடகம் என்பதை உறுதிப்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் கூட்டத்தை ஒருங்கிணைக்கத் தவறியதால் ஏற்பட்ட விரிசலை மறைக்க, மத்திய நிறுவனங்கள் மீது பழி போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் திடீர் ஐடி ரெய்டு விவகாரம் மற்றும் அண்ணாமலையின் கிண்டல் பேச்சு ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
