நடிகர் விஜய் அரசியல் பணிகளில் இறங்கியுள்ள நிலையில், அவரை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் பேசியுள்ளார். ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் வெயில், மழை என்று பாராமல் மக்களுக்காகத் தீவிரமாக உழைப்பவர்கள் என்றும், அவர்கள் உண்மையான மக்கள் தலைவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

​சினிமா படப்பிடிப்பில் சில மணிநேரம் மட்டும் நடித்துவிட்டு, மற்ற நேரங்களில் கேரவனிலேயே இருக்கும் விஜயால் அரசியலில் நிலவும் கடுமையான வெயிலைத் தாங்க முடியாது என்று அவர் சாடியுள்ளார். மேலும், மே 4-ம் தேதிக்குப் பிறகு விஜய்க்கு அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு கிடைத்துவிடும் என்றும் தனது பேட்டியில் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.