சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,14,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.