ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் செய்த மின்னல் வேக ஸ்டம்பிங் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ரவி பிஷ்னோய் வீசிய பந்தை எதிர்கொள்ள கேமரூன் கிரீன் முன்னேறி வந்தபோது, ஜூரெல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இதைப் பார்த்த கிரீன் தான் அவுட் ஆனதையே உணராமல் திகைத்து நின்றார். தோனியால் கூட இவ்வளவு வேகமாக செய்திருக்க முடியுமா என்று ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு அந்த ஸ்டம்பிங் அமைந்திருந்தது.
துருவ் ஜூரெலின் இந்த அபாரமான திறமையைக் கண்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். ஜூரெலின் வேகத்தைப் புகழ்ந்த சச்சின், “ஒரு பக்கம் ஸ்டம்ப் மட்டுமே தெரிந்த நிலையில், நான் கண்ணிமைக்கும் முன்பே கச்சிதமாக வேலை முடிந்துவிட்டது.
Only one stump in sight, on the move, and done in the blink of an eye! Simply magnificent Dhruv Jurel! pic.twitter.com/SYizvaTjaD
— Sachin Tendulkar (@sachin_rt) April 19, 2026
“>
உண்மையிலேயே இது ஒரு அற்புதமான ஸ்டம்பிங், துருவ் ஜூரெல்!” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இளம் வீரரான ஜூரெல், மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய திறமையை வெளிப்படுத்தியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
