தேர்தல் பிரசாரத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “நானும் ஒரு நடிகன் தான், எனக்கும் ரசிகர்கள் அன்பு காட்டுகிறார்கள். ஆனால் சினிமா புகழை வைத்து ஓட்டு கேட்பது சரியல்ல” என்று அவர் பேசியுள்ளார்.

​மேலும், “சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் டான்ஸ், சண்டை என பல ஆண்டுகள் பயிற்சி எடுத்த நீங்கள், நாட்டை ஆளுவதற்கு என்ன பயிற்சி எடுத்திருக்கிறீர்கள்? அரசியல் என்பது மக்களின் அடிப்படை தேவைகளை அறிவது. வெறும் செல்வாக்கை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வர நினைப்பது முறையல்ல” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ள இந்த அதிரடி கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.