கடலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். “நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களையும், ரசிகர்களையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மிக வலிமையானவர்கள். ஆனால், அவர்கள் தங்களது வாக்குகளை வீணாக்க வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

​”திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடுதான் விஜய் கட்சியைத் தொடங்கினார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டும் தனியாக நின்று திமுகவை வீழ்த்திவிட முடியாது. அதனால், திமுக எதிர்ப்பு வாக்குகளைச் சிதறவிடாமல் அதிமுக கூட்டணிக்கு விஜய் ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், அன்புமணி ராமதாஸின் இந்தப் பேச்சு தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.