ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் ஷிவம் துபே பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஸ்டேடியத்தில் இருந்த எஸ்ஆர்ஹெச் ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்து ஏதோ ஒரு சடங்கு செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
మంత్రాలకు వికెట్లు పడతాయా ?#IPL #CSK #SRH #BlackMagic pic.twitter.com/f6vqwFqRZt
— TVR Media 🚩🚩🚩🇮🇳 (@Tvr_Media7) April 19, 2026
வேடிக்கை என்னவென்றால், அந்த ரசிகர் எலுமிச்சையைச் சுற்றி முடித்த சில நிமிடங்களிலேயே ஷிவம் துபே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், “இது என்னப்பா புதுசா இருக்கு? கிரிக்கெட்ல பிளாக் மேஜிக் பண்றாங்களா?” என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆட்டம் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், அந்த ரசிகரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களையும், தொலைக்காட்சியில் பார்த்தவர்களையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
