கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சேலம் மேற்குத் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தபோது, பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், “அதிக வெயில் மற்றும் அலைச்சல் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு (Sugar Level) குறைந்ததே இந்தத் திடீர் மயக்கத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாகப் பாமக மற்றும் காங்கிரஸ் இடையே தற்போது கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் காங்கிரஸ் மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ராமசுகந்தன்,

“ஐயா ராமதாஸ் அவர்கள் சேலத்தில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தபோது, அவரது பேத்திகள் தருமபுரியில்தான் இருந்தார்கள். நினைத்திருந்தால் அவர்கள் நேரில் சென்று பார்த்திருக்கலாம். ஆனால், தருமபுரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டுக் கிளம்பியவர்கள் ஐயாவைப் பார்க்கச் செல்லவில்லை. சொந்தக் குடும்பமே அக்கறை காட்டாத நிலையில், காங்கிரஸ் மீது அவதூறு பரப்புவதை அன்புமணி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

“>