ஸ்மார்ட்போன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன், தானாகவே போனிலிருந்து வெளியேறும் ஒரு வினோதமான சார்ஜர் அடாப்டரை ‘குவாஜியா’ என்ற சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த அடாப்டர், பேட்டரி 100 சதவீதத்தை எட்டியவுடன் அதில் உள்ள காந்த விசை மற்றும் ஸ்பிரிங் உதவியுடன் போனை விட்டு மெதுவாகத் துண்டிக்கிறது.

பொதுவாக போன்களை இரவு முழுவதும் சார்ஜில் போடுவதால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைவதைத் தடுக்க இந்த மெக்கானிக்கல் முறை உதவுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என இரண்டிலும் 140 வாட்ஸ் வேகம் வரை சார்ஜ் செய்யக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்கள் பேட்டரி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மென்பொருள் மூலமாகப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், இந்தச் சாதனம் உடல் ரீதியாகவே இணைப்பைத் துண்டிப்பதால் மின்சாரம் பாய்வது முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

“>

 

லித்தியம்-அயன் பேட்டரிகள் முழு சார்ஜ் நிலையிலேயே நீண்ட நேரம் இருப்பதாலும், வெப்பமடைவதாலும் சீக்கிரம் பழுதடைவதைத் தவிர்க்க இது ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப உலகில் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கவும், அடிக்கடி பேட்டரி மாற்றும் செலவைக் குறைக்கவும் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் பயனர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையும்.