ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மைதானத்திலேயே ரசிகர் ஒருவரை நோக்கி ஆபாசமாகத் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது சைட் ஸ்கிரீன் அருகே இருந்த ரசிகர் ஒருவர் எழுந்து நின்று இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியா, முதலில் அமருமாறு சைகை காட்டினார். ஆனால், அடுத்த பந்திலும் அதே ரசிகர் எழுந்து நின்றதால் தனது நிதானத்தை முற்றிலும் இழந்த ஹர்திக் பாண்டியா, அந்த ரசிகரை நோக்கி ஆபாசமான வார்த்தைகளால் கத்தினார்.

 

இது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகப் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோல்வியடைந்த நிலையில், அணியின் தோல்வி மற்றும் பும்ராவுடனான கருத்து வேறுபாடு எனப் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவே பாண்டியா இப்படி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கேப்டனாக மைதானத்தில் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டது சரியா என ரசிகர்கள் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.