பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2019 ஏப்ரல் 1-க்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களுக்கு ‘எச்.எஸ்.ஆர்.பி’ (HSRP) எனப்படும் உயர்தர பாதுகாப்பு பதிவு எண் பலகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த எண் பலகை இல்லாத வாகனங்களுக்கு இனி மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) வழங்கப்படாது என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை மாற்றத்தால், பழைய எண் பலகையுடன் வாகனங்களை ஓட்டுபவர்கள் இனி சட்ட ரீதியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

​இந்த விதிமுறையை மீறி எச்.எஸ்.ஆர்.பி இல்லாமல் வாகனங்களை இயக்கினால் ரூ.5,000 அபராதமும், மாசு சான்றிதழ் இல்லாததற்குத் தனியாக ஒரு தொகையும் என மொத்தம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தில் கோடிக்கணக்கான வாகனங்களில் இன்னும் இந்த பாதுகாப்பு எண் பலகை பொருத்தப்படாமல் இருப்பதால், அபராதத்தைத் தவிர்க்க உடனடியாகப் பழைய எண் பலகைகளை மாற்ற வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.