இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் கணவருமான விராட் கோலி, சமூக வலைதளத்தில் அவர் செய்த ஒரு செயல் காரணமாக மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு, ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல சமூக வலைதளப் பிரபலம் (Influencer) லிஸாலஸ் (Lizzalazz) என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றிற்கு விராட் கோலி ‘லைக்’ செய்ததாகக் கூறி, அதன் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

இது தவறுதலாக நடந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றாலும், நெட்டிசன்கள் இதனை வைத்துப் பெரிய அளவில் விவாதித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விதவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘ரெடிட்’ (Reddit) தளத்தில் பயனர் ஒருவர், “இதனைப் பார்த்தால் அனுஷ்கா சர்மா மிகுந்த அதிருப்தி அடைவார்” என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இதற்கென தனியாக ஒரு தனிப்பட்ட (Private) கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள் என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இது போன்ற சில சம்பவங்களில் கோலியின் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு வெளிநாட்டு மாடலின் புகைப்படத்திற்கு அவர் ‘லைக்’ செய்திருப்பது கிரிக்கெட் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், கோலி தரப்பிலிருந்து இது குறித்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.