அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் பத்திரிகை 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உலகளாவிய முன்னோடிகள், தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தலைவர்கள் பிரிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி, போப் லியோ மற்றும் வங்காளதேச பிரதமர் தாரிக் ரகுமான் போன்ற முக்கிய நபர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களைப் பொறுத்தவரை இந்தப் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை, பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர், இந்திய-அமெரிக்க சமையல் நிபுணர் விகாஸ் கன்னா மற்றும் யூடியூப் நிறுவனத்தின் தலைவர் நீல் மோகன் ஆகியோர் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுடன் நியூயார்க் மேயர் மம்தானி, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி ஆகியோரும் உலகின் சக்திவாய்ந்த மனிதர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியல் உலக அளவில் தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
