தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் விஜய் மறைமுகமாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தன்னால் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்று விஜய் கூறுவது ஒரு பலவீனமான அரசியல் வியூகம் என அவர் சாடியுள்ளார்.
மேலும், விஜய்யின் இத்தகைய அரசியல் அணுகுமுறை தவெக-வுக்கு எந்தவிதத்திலும் வலுசேர்க்காது என்றும், அது மாற்றுக் கட்சிகளுக்கே லாபமாக முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்தத் தேர்தல் வியூகத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள திருமாவளவனின் இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
