உயிருடன் இருக்கும்போது வீடு வாடகைக்கு எடுப்பது சாதாரணமான ஒன்றுதான், ஆனால் பொலிவியாவின் லா பாஸ் நகரில் இறந்த பிறகும் கல்லறைக்கு வாடகை செலுத்த வேண்டிய வினோதமான வழக்கம் உள்ளது.

அங்குள்ள ‘செமெட்டேரியா ஜெனரல்’ என்ற பிரம்மாண்ட மயானத்தில், ஒரு உடலை அடக்கம் செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அந்த காலக்கெடு முடிந்தவுடன், உறவினர்கள் தொடர்ந்து வாடகை செலுத்த வேண்டும்.

அப்படி வாடகை செலுத்தத் தவறினால், அந்த கல்லறை காலி செய்யப்பட்டு உடல் எச்சங்கள் அகற்றப்படுகின்றன.‌ இவ்வாறு அகற்றப்படும் உடல்கள் பின்னர் தகனம் செய்யப்பட்டு, அவற்றின் சாம்பல் அல்லது எலும்புகளைப் பாதுகாக்க மயானச் சுவரில் உள்ள சிறிய கண்ணாடி அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.

இது பார்ப்பதற்கு பல அடுக்கு மாடி குடியிருப்புகளைப் போலவே காட்சியளிக்கிறது. சுமார் 210 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மயானம், ஒரு பெரிய வணிக மையமாகவே செயல்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raj Phanden (Cycle Baba) (@cycle_baba)

“>

தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளைத் தக்கவைக்க, மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை வாடகையாகச் செலுத்தி இந்த இடங்களைப் பராமரித்து வருகின்றனர்.