சின்னச் சின்ன கஷ்டங்களுக்காகக் கூட கடவுளைச் சபிக்கும் இந்த உலகில், மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஒரு மாற்றுத்திறனாளி லாரி ஓட்டுநர் நிரூபித்துள்ளார். சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், மிகுந்த போராட்டத்திற்கு இடையே அந்த ஓட்டுநர் தனது லாரியில் இருந்து இறங்கி குருத்வாராவிற்குச் செல்கிறார்.
அவரது ஒவ்வொரு அசைவிலும் வலி தெரிந்தாலும், இலக்கை அடைந்தவுடன் அவரது முகத்தில் தெரியும் அமைதி பார்ப்பவர் கண்களைக் குளமாக்குகிறது. ஜஸ்லீன் சிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோ, இதுவரை 47 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “வாழ்க்கையில் நமது சிறு பிரச்சனைகளைப் பற்றிப் புலம்புவதை நிறுத்திவிட்டு, இருக்கும் வாழ்க்கைக்கு நன்றி சொல்ல வேண்டும்” என உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
“இறக்கைகள் பறப்பதற்குத் தேவையில்லை, தைரியம் இருந்தால் போதும்” என்ற கருத்தை இந்த வீடியோ ஆழமாகப் பதிவு செய்துள்ளது. பலருக்குப் பெரும் உந்துதலை அளித்துள்ள இந்தக் காட்சி, வெறும் வீடியோவாக மட்டுமல்லாமல், சோர்ந்து போய் உட்காருபவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.
