குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள புகழ்பெற்ற மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘சஸ்கார் சங்கம்’ என்ற கலாச்சார விழாவில், மாணவி ஒருவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், நடிகை மாதுரி தீட்சித்தின் ‘தக்-தக்’ பாடலுக்கு அந்த மாணவி நடனமாடினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ‘கலாச்சார நகரமான’ வதோதராவின் கண்ணியத்தை இந்த நடனம் சீர்குலைப்பதாகக் கூறி காங்கிரஸ் மற்றும் NSUI அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளான அந்த மாணவி, தற்போது கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளார். தான் புடவை அணிந்து முறைப்படிதான் நடனமாடியதாகவும், அதில் எந்தவித ஆபாசமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பாடலைத் தவறாகத் தேர்ந்தெடுத்ததற்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்த அவர், தன்னைச் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிப்பது மிகுந்த மன உளைச்சலைத் தருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
‘मैंने साड़ी पहनी थी, अश्लीलता कहां थी?’, ट्रोलिंग के बाद यूनिवर्सिटी छात्रा खूब रोई
गुजरात की वडोदरा स्थित MS यूनिवर्सिटी में आयोजित ‘संस्कार संगम’ कार्यक्रम विवादों की भेंट चढ़ गया है. अखिल भारतीय विद्यार्थी परिषद (ABVP) के बैनर तले आयोजित इस कार्यक्रम में एक छात्रा ने माधुरी… pic.twitter.com/uSzb5PyR4Q
— AajTak (@aajtak) April 13, 2026
“>
தேர்வுகள் நெருங்கும் வேளையில், படிப்பில் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளை பல்கலைக்கழகம் நடத்துவதாகப் பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
