மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
நாசிக்கின் வில்ஹோல் பகுதியில் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து, நடுரோட்டில் ஒரு நபரை வழிமறித்து மிளகாய்த்தூளை வீசித் தாக்கியுள்ளனர். கண்கள் எரியத் துடித்த அந்த நபரின் தலையில் பெரிய கல்லைப் போட்டு வீழ்த்திய அந்தப் பெண், பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் (அரிவாள் போன்ற ஆயுதம்) அந்த நபரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வெறித்தனமாகக் குத்தியுள்ளார்.
அந்த நபர் துடிதுடித்துச் இறந்த பிறகும் ஆத்திரம் அடங்காத அந்தப் பெண், அவரது முகத்தைச் சிதைக்கும் வகையில் மீண்டும் மீண்டும் குத்திய அந்த பயங்கரக் காட்சிகள் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகியுள்ளது.
नाशिकमधील घटना, भर रस्त्यावर इसमाची हत्या, महिलेनं कोयत्याने केले वार pic.twitter.com/C3HttxhFhd
— VIRALबाबा (@viralmedia70) April 13, 2026
“>
சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, கொலையை முடித்த அந்த ஜோடி, தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக நம்பர் பிளேட் மாற்றப்பட்ட இருசக்கர வாகனத்தில் ஏறிச் சாமர்த்தியமாகத் தப்பிச் சென்றனர்.
இந்தக் கொடூரக் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த நாசிக் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட நபர் மற்றும் கொலையாளிகள் யார் என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், கள்ளக்காதல் அல்லது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த வெறிச்செயல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பரபரப்பான நெடுஞ்சாலையில் அரங்கேறிய இந்த ரத்தக் களரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
